எனது வாழ்க்கை
*நவரத்தினம் *
29/07/1955
-
அப்பா * சிதம்பரப்பிள்ளை*
அம்மா * செல்லம்மா*
அம்மாவின்
தந்தை
சங்கரப்பிள்ளை
அப்பு
பெரும் சிவதொண்டர்.
சுன்னாகம் * மயிலணி*
சிவன் ஆலயத்திற்கு காலையில் ஊரேல்லாம்
வலம்வந்து பூக்கள் பறித்து இருக்கும் காலம் வரை சிவனுக்கு சாத்தி
பெரும் தொண்டாற்றியதன் பலன்.
அவர் எங்களுக்கு திடமாக குறிப்பிட்டது போல்,
சித்திரா பௌர்ணமி
அன்று 1969 ஆண்டு
* சிவபதம் அடைந்தார்*
அப்புவும் ஓர் * சித்தர்*
என உணரமுடிகிறது
எனது * தாய் தந்தையர்*
கதிர்காமம் கந்தனிடம் 22 வருடங்கள் தவம்
பெற்றதின் பலன்தான் * அடியேன் இப் பூவுலகில் அவதரித்தேன்*.
அப்புவின் பராமரிப்பில் இறைபக்தியுடன் வாழ்ந்தேன்.
குருவானவர் அருட்தந்தை தேவதாசன் அடிகளாரால்
உருவாக்கப்பட்ட
ஜொனியன்ஸ் கழகத்தினுடாக அடிகளாரின் தொண்டனாக
அவரின் வழிநடத்தலில் வாழ்வில்
நேர்மை தன்னம்பிக்கை
உறுதியான விடாமுயற்சி யின்
உறுதியுடன் வளர்ந்தேன்
சகல கலைகளையும்
சிறப்பாக கற்றுக்கொள்ளும் காலமாக இவை அமைந்தன.
என் *தாய் தந்தையர் *
அன்பை மூலதனமாக எனக்கு ஊட்டி நல்வழி காட்டிய வாழ்வியல்
பலன்களை இப்போது
உணரமுடிகிறது
கல்வி
*சுன்னாகம் மயிலணி *
சைவமகா வித்தியாலயம்
*தெல்லிப்பழை *
யூனியன் கல்லூரி
*சுன்னாகம் *
ஸ்கந்தவரோதயா கல்லூரி
JAFFARJEE BROTHERS
COLOMBO இல்
கடமையாற்றினேன்
16/07/1971 இல் என்
தந்தை சிவபதம் அடைந்தார்.
16/07/1981 அன்று
வெளிநாடு புறப்பட்டு
ஜேர்மனியில் தங்கி
* 1982* இல். பிரான்ஸ்
வந்து சேர்ந்தேன்.
16/07/1982 இல்
* Citroën* Car நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
* 9/9/1984 *திருமணம்*
* 12/05/1996* முகம்
திரைப்படம் தயாரித்து
பாரீஸ் திரையரங்கில்
* வெளியிடப்பட்ட தினம்* உலகெங்கும் எங்கள் மக்கள் பார்வைக்கு
காண்பிக்க
பட்டு இலங்கையில் பேர் ஆதரவைப் பெற்றதுடன்
2000 ஆண்டு
பொங்கல் தினத்தின் சிறப்பு படமாக
சக்தி தொலைக்காட்சியில்
*வெளியிடப்பட்டது *
2000 ஆண்டு ஆரம்பத்தில் பாரிஸ்ல்
TRT தமிழ் ஒலி
* வானெலியை*
பொறுப்பேற்று மிகவும் முதன்மையான சிறப்பான முறையில்
செயல்பட்டது.
இலங்கை வானொலி புகழ்
முகத்தார் ஜேசுறட்னம் அப்புக்குட்டி ராஜகோபால் ஆகியோர்
இணைந்து
மிகவும் சிறப்பாக வழிநடத்தியமை இதன்
சிறப்பு
பின் நாளில் எங்கள் விருப்பத்திற்குரிய
பெயர் மாற்றம் செய்து
ABC தமிழ் ஒலி
என நடத்தினோம்
குழந்தைகள் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடத்திய
நவாஜோதி எனது துணைவியார்
-
-
-
*2013 *
ஓம் சரவணபாவா
சுவாமியை சந்தித்து
2015 ஆடி அமாவாசை யின்
*தரிசனத்தின் போது *
சீரடி சாயிபாபா வின்
மோதிரம் அணிந்து
விட்ட அதிசயம்
21/03/2019 அன்று
சூராவத்தை யில்
ஓம் சீரடி சாயிபாபா ஆலயம் அமைந்த
அற்புதம்
-
-
-
ஓம் சாயி ஓம் சாயி ஓம் சாயி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏